Tuesday, March 16, 2010

ஆத்மாவின் தந்தை

உடலில் தந்தை உடல் போலவே இருக்கிறார். அதைப் போலவே ஆத்மாவின் தந்தையும் ஜோதி சொரூப ஆத்மாவாக இருக்கிறார். ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை பரமாத்மா (பரம் - உயர்ந்த, ஆத்மா). ஆனால் (இதில் சாதி, மத வேறுபாடு இல்லை). நாம் பல ஜென்மங்களின் பலரைத் தந்தை என அழைக்கிறோம்.

உருவத்தில் ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றுபோல இருந்தாலும் ஆத்மா, பிறப்பில்,இறப்பில் வருகிறது. ஆனால் பரமாத்மா பிறப்பு இறப்பு சக்கரத்தில் வருவதில்லை. எனவேதான் அவரை ஜனன, மரண ரஹீத்(பிறப்பு இறப்பு அற்றவர்), அஜென்மா(ஜென்மம் இல்லாதவர்), அயோனி (கர்பத்தில் வராதவர்) என்று கூறுகிறோம்.

பிறப்பு இறப்பில் வருவதால் ஆத்மாவிற்கு உடல் கிடைக்கிறது. பரமாத்மா பிறப்பு இறப்பில் வராததால் அவருக்கு உடல் இல்லை. சதா ஜோதி சொரூபமாகவே இருக்கிறார். எனவே அவரை நிராகர் (உடலற்ற) பரமாத்மா என்று அழைக்கின்றோம்.

ஆத்மா, இயல்பில் சாந்தி சொரூபமாக இருக்கிறது. பரமாத்மாவோ சாந்திக் கடலாக இருக்கிறார். மேலும் அனைத்து குணங்களிலும், சக்திகளிலும் கடலாக இருக்கிறார். துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவராகவும் ஞானம் அளிக்கும் ஞானக் கடலாகவும் இருக்கிறார். ஆத்மாக்களின் பாவங்களை நீக்கும் பாபகடேஷ்வராக இருக்கிறார்.

எனவேதான் உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் இறைவனை வேண்டி நிற்கின்றன.

பரம்பிதா பரமாத்மா கூறுகிறார்:

"இனிமையான குழந்தைகளே! தேக மற்றும் தேக சம்பந்தங்கள் அனைத்தையும் மறந்து, தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையாகிய
என்னை மனதார நினைவு செய்யுங்கள். உங்கள் பாவகர்மங்கள் அனைத்தும் சாம்பலாகிவிடும்."

இறைவனின் உண்மை சொரூபத்தை அவரை அன்போடு நினைவு செய்து, சுகமாக வாழ்வோமாக!

No comments:

Post a Comment