Saturday, March 13, 2010

நீங்கள் அறிந்திராத உங்களைப் பற்றிய உண்மைகள்!

இந்த வேகமான கணினியுகத்தில், எவ்வளவுதான் அறிவியல் முன்னேற்றம் கண்டிருந்தாலும் நம்மால் எல்லா நேரங்களிலும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடிவதில்லை. ஒரு சாதாரண கணினியைப் பற்றி நன்கு அறிந்திருந்தால்தான், அதனுடைய பயனை நம்மால் முழுமையாக அனுபவிக்க முடியும். மேலும் அதில் ஏதேனும் குறையிருந்தல்கூட நம்மால் சரிசெய்து பயன்படுத்த முடிகிறது. அதேபோல், நம்மைப் பற்றிய சில முக்கிய உண்மைகள் தெரியாத காரணத்தால்தான், நம்மிடம் இருக்கும் குறைகளைப் போக்கி, எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியதில்லை. அவற்றில், நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை, நீங்கள் இந்த உடல் இல்லை என்பது!

நான் என்ற சொல் அழியக்கூடிய இந்த உடலைக் குறிக்கும் சொல் அல்ல. நாம் இதை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். கீழ்க்கண்டவற்றைக் கூர்ந்து நோக்குங்கள்.

என்னுடைய பேனா - நான் பேனா
என்னுடைய கார் - நான் கார்
என்னுடைய வீடு - நான் வீடு
என்னுடைய உடல் - நான் உடல்

தான் உடலில்லை என்றால் "நான் யார்?". "நான்" என்பது, இந்த உடலுக்குள் இருந்துகொண்டு அதை இயக்கம் "உயிர்". இந்த உயிர்தான், தன்னை, "நான்" என்று சொல்லிக் கொள்கிறது. இந்த உடலை "என்னுடைய உடல்" என்று கூறிக் கொண்டு உரிமை கொண்டாடுகிறது.

உயிரை நாம் "ஆத்மா" என்று அழைக்கிறோம்.

நீங்கள் ஒரு "ஆத்மா". இந்த உடலல்ல. இந்த உடலை இயக்கம் சக்திதான்
நீங்கள்! உடல் அழியக்கூடியது. உயிர் அழிவற்றது. உயிர் ஒரு உடலை விடுத்தது, மற்றொரு உடலை எடுக்கிறது. அழிவற்ற ஆத்மா, உடலில் இரு புருவங்களுக்கு மத்தியில், கண்களுக்கு புலன்படாத மிகச்சிறிய ஒளிப்புள்ளியாக இருந்து கொண்டு கண்கள் மூலம் பார்க்கிறது. காதுகள் மூலம் கேட்கிறது, உடல் உறுப்புகள் மூலம் காரியங்களைச் செய்கிறது.

மொத்தத்தில் ஆத்மா இந்த உடலுக்கு இராஜாவாகத் திகழ்கிறது.

ஆத்மாவின் இயற்கையான குணம் அமைதி, தூய்மை, ஆனந்தம். தன்னை 'உடல்' என்று தவறாக புரிந்து கொள்வதால்தான் துக்கம், ஏற்படுகிறது.

அனைவரையும் உடல் என்று பார்பதல்தான் ஆத்மாவிற்குத் துன்பத்தை ஏற்படுத்தும் காமம், கோபம், பேராசை,அஹங்காரம், பற்று முதலான ஐந்து விகாரகுணங்கள் ஏற்படுகின்றன. ஆத்மாவின் சக்தியும் குறைகிறது.

தன்னை ஆத்மா என்று உணர்ந்து கொள்வதால் ஆத்மாவின் இயற்கையான குணங்கள் திரும்பிக் கிடைக்கின்றன. மேலும் ஆத்ம சக்தி அதிகமாகிறது. இதுவே உண்மையான "சுய உணர்வில்" இருப்பதாகும்.

சில நிமிடங்கள் உலகில் உள்ள அனைவரையும் மனக்கண்ணால் ஆத்மாவாக பாருங்கள். உங்களுக்கு கிழ்கண்ட வித்தியாசங்கள் ஏதேனும் தெரிகிறதா? ஏழை ஆத்மா, பணக்கார ஆத்மா, கருப்பு ஆத்மா, சிவப்பு ஆத்மா, ஆண் ஆத்மா, பெண் ஆத்மா, இந்து ஆத்மா, முஸ்லீம் ஆத்மா, வயதான ஆத்மா, இளமையான ஆத்மா. எந்த வித்தியாசமும் தெரியவில்லையல்லவா!

பிறரை உடல் எனப் பார்பதால்தான், இத்தகைய வித்தியாசங்களும், அதனால் காமம், கோபம், அஹங்காரம் முதலான குணங்கள் தோன்றுகின்றன. துன்பமும், அசாந்தியும், ஏற்படுகிறது.

தன்னை ஆத்மா என உணர்ந்து அனைவரையும் ஆத்மா எனப் பார்ப்பதால் இத்தகைய வீண் எண்ணங்கள் தோன்றுவதேயில்லை! மன அமைதியும், மன ஒருமைப்பாடும் ( concentration ) அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment